ஒற்றை வரி bash கடவுத்தொடர் தேரி

ஒற்றை வரி bash கடவுத்தொடர் தேரி

Published by Arun Isaac on

In other languages: English

Tags: மென்பொருள், bash

கடவுத்தொடர் தேர்ந்தெடுக்க ஒற்றை வரி bash கட்டளை – coreutils தொகுப்பிலுள்ள shuf நிரல் இதைச் சாத்தியமாக்குகிறது.

போன வாரம் தான், கடவுத்தொடர் தேர்ந்தெடுக்க bash உரைநிரல் ஒன்றை எழுதினேன். GNU Social யில் க்ளாஸ் ஜான்சன் சிம்மர்மான் அதற்கு ஒற்றை வரி bash கட்டளை ஒன்றைக் காட்டினார். அக்கட்டளையை diceware பட்டியலையும் /dev/random யும் பயன்படுத்தச் சற்று மாற்றியமைத்துக் கீழ் காணலாம்.

shuf --head-count 6 --repeat --random-source /dev/random diceware.wordlist.asc | cut -f 2 | tr '\n' ' '

இறுதி பாகம் awk இல் வேண்டுமெனில்,

shuf --head-count 6 --repeat --random-source /dev/random diceware.wordlist.asc | awk '{printf "%s ", $2}'
மாற்றம் (மார்ச் 13, 2023)
ஒரேச் சொல் பன்முறை தேர்ந்தெடுக்கும்படி shuf கட்டளையை மாற்று.